ETV Bharat / state

சேலத்தில் மாற்றுத்திறனாளி இணையர்களுக்கு நடந்த திருமண விழா - tamil latest news

சேலத்தில் மாற்றுத்திறனாளி இணையர்களுக்கு, அனைத்து சீர்வரிசைகளையும் வழங்கி திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலத்தில் மாற்றுத்திறனாளி இணையர்களுக்காண திருமண விழா

author img

By

Published : Dec 7, 2022, 4:56 PM IST

சேலம்: மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மணவாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில், அப்படிப்பட்ட அவர்களின் கனவை நனவாக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கும் மணவாழ்வு உண்டு என்று மெய்பித்துக் காட்டியுள்ளது, சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கம்.

இதன்மூலம் தங்களின் வாழ்க்கையிலும் திருமணபந்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வாழ வழி ஏற்பட்டுள்ளதாக, மாற்றுத்திறனாளி மணமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண விழா சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தர்மபுரி, சென்னை, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து மாற்றுத்திறன் கொண்ட ஜோடிகளுக்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் திருமண விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாற்றுத்திறனாளிகளின் உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சேலத்தில் மாற்றுத்திறனாளி இணையர்களுக்காண திருமண விழா

தொடர்ந்து ஐந்து ஜோடிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகளும், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக நல்வாழ்வு சங்க தலைவர் அத்தி அண்ணா கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்த நிலையில், தற்பொழுது உதவிக்கரம் மாற்றுத்திறனாளி நல்வாழ்வு சங்கம் சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இதே போல பல்வேறு பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண விழா நடத்தப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'நாங்களும் பொன்னி நதி பார்த்துட்டோம்' மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நெல்லை சார் ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.