ETV Bharat / state

முதலமைச்சர் பதவி பறிபோகக்கூடாது: விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத எடப்பாடி - வேளாண் மசோதாவை ஆதரிக்கும் எடப்பாடி

சேலம்: தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி மாநிலச் செயலாளர் மயில்சாமி தெரிவித்தார்.

mnm
mnm
author img

By

Published : Oct 1, 2020, 8:09 AM IST

சேலத்தில் நேற்றிரவு (செப்.30) மக்கள் நீதி மய்யத்தின் விவசாயிகள் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய விவசாய அணியின் மாநிலச் செயலாளர் மயில்சாமி, முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்சட்டம் விவசாயிகளை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே உதவும் சட்டமாக இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும் விவசாயிகள் பொருளாதார இழப்பைத் தான் சந்திப்பார்கள். இந்தச் சட்டத்தை எந்த ஒரு விவசாயியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதோடு, பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே எல்லா சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்" என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளும், கட்டுப்பாடுகளும்: அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.