ETV Bharat / state

விலை உயர்வு: மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் - பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அண்டா குண்டா அடுப்புகளுடன் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

author img

By

Published : Jul 10, 2021, 3:50 PM IST

சேலம்: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அண்டா குண்டா அடுப்புகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தால் சேலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக இன்று (ஜூலை 10) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சேலத்தில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்
சேலத்தில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் பிரபு மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு

இந்த விலை ஏற்றத்தால் சாதாரண அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மாநில அரசையும், மாநில அரசு ஒன்றிய அரசையும் மாறி மாறி காரணம் கூறி வருகின்றன. இந்த நிலை மாறி மக்களை பாதுகாக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த இரு அரசுகளும் முன்வர வேண்டும் . இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றார்.

இதையும் படிங்க: விலை ஏற்றம் கண்ட மதுரை மல்லிகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.