ETV Bharat / state

சேலம் மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடா? - ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!

Magudanchavadi sub registrar office issue: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில், பொறுப்பு சார்பதிவாளர் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், பத்திரப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 2:03 PM IST

மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகம்
மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகம்

சேலம்: சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடியில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில், மகுடஞ்சாவடி மற்றும் அதன்
சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நிலம், வீடு, கடைகள், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவுகளும், விசேஷ நாட்களில் அதிக அளவிற்கு பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளர் புரோக்கர்கள் மற்றும் போலி பத்திர எழுத்தாளர்களுடன் இணைந்து அதிகளவில் மோசடியில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சில நிலங்களுக்கு, போலி ஆவணங்கள் தயாரித்து, பொறுப்பு சார் பதிவாளர் மூலமாக கிரையம் செய்து, பதிவு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, புதன் கிழமை முதல் பாலச்சந்திரன் என்பவர் (பொறுப்பு) சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஒரு சில மோசடியான பத்திரங்களை பதிவு செய்து கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாட்டுப்புற கலைகளை மீட்க முயற்சி : 1000க்கும் மேற்பட்ட மகளிர் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் ஆடி கண்கவர் விருந்து!

இது போன்று தான் மகுடஞ்சாவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிந்த போது கடந்த செப்டம்பர் 20 தேதி முதல் 23 தேதி வரை நான்கு நாட்களிலும் மோசடி பத்திரப்பதிவுகள் அரங்கேறி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மகுடஞ்சாவடியில் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றிய தினங்களில் பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தமிழக அரசு அறிவித்த ஆணைப்படி இடைத்தரகர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தின் உள்ளே நுழையாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முறைகேடான பதிவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: கற்பித்தல் - கற்றல் சுதந்திரத்தை பறிக்கிறதா எமிஸ் வழிமுறை? எமிஸ் நடைமுறையை தடை செய்ய கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.