சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “சேலம் மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள், தங்களின் லாரிகளை இயக்கி வரும் ஒட்டுநர்களுக்கு கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும். தங்களின் லாரிகள் எந்த மாநிலத்திலிருந்து என்றைக்கு சேலம் மாவட்டத்திற்கு வருகின்றன என்ற விவரத்தினை அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
மேலும், லாரி ஓட்டுநரின் பெயர், கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களையும் உடனடியாக அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால்தான் அவ்வாகன ஓட்டுநர்களுக்கு எளிதாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு கரோனா தொற்று இருக்கின்றதா என்பதைக் கண்டறிய முடியும். எனவே அனைத்து லாரி உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உரிய விவரங்களை உடனுக்குடன் மேற்குறிப்பிட்டுள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'எப்போது வீடு திரும்புவோம்' - ஏக்கத்தில் வடமாநில லாரித் தொழிலாளர்கள்!