சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் பகுதியில் பழமையான அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சுப்பிரமணியருக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.
இந்த முறை 25 லட்ச ரூபாய் புதிய நோட்டுகளைக் கொண்டு சாமியை முழுவதுமாக அலங்கரித்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதனை அறிந்த அப்பகுதி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, சுப்பிரமணியரைப் பணக் கோலத்தில் தரிசனம் செய்து சென்றனர்.
பணத்தால் சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, கோயிலைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Bus Ticket for Chicken | 10 ரூபாய் கோழிக்குஞ்சுக்கு பேருந்தில் அரை டிக்கெட்!