சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மத்திய சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் வாழ்வு சிறக்கவும், சிறையிலிருந்து கைதிகள் விடுதலை ஆனதும் தொழில் தொடங்கவும் பட்டுப்புழு வளர்ப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மத்திய சிறையில் இந்த மையத்தினை மாவட்ட பட்டு வளர்ச்சி துறை இயக்குநர் வெங்கட பிரியா துவக்கி வைத்தார். அவருடன் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். பின்னர் பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் வெங்கட பிரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பட்டு வளர்ப்பு இதற்கு முன் கடினமான தொழிலாக இருந்தது. ஆனால் தற்போது எளிதாக, குறைந்த செலவில் வளர்க்கலாம்' என்றார்.
மேலும், 'பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் நிறைய வருமானம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலை கற்கும் கைதிகள் விடுதலை ஆன பின் பட்டுப்புழு வளர்த்து அதிக வருமானம் ஈட்டலாம்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ. 1.74 லட்சம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பாராட்டு