ETV Bharat / state

கிசான் திட்ட முறைகேடு: சேலத்தில் மேலும் ஒருவர் கைது! - one more person arrested in Salem

சேலம்: பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக சேலத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kisan project scam one more person arrested in Salem

author img

By

Published : Nov 3, 2020, 3:58 PM IST

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து, சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளின் பட்டியலை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார். அதன் பேரில் வேளாண்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், முறைகேடாக பயனாளிகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், சிபிசிஐடி காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் முறைகேட்டில் ஈடுபட்டதாக 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ராஜா என்ற தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தாரமங்கலத்தில் தனியார் கணினி மையம் மூலம் போலி ஆவணங்களைத் தயாரித்து, பயனாளிகளை பதிவு செய்த கலையரசன், ராகுல் ஆகிய இருவரையும் முதற்கட்டமாக துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். பெத்தநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றி வந்த உதவி அலுவலர் அன்பழகன் மற்றும் ஓட்டுநர் பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 926 தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட 5.75 கோடி ரூபாயில், 15 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 5.50 கோடி ரூபாய் இதுவரை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் அருகே சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் என்பவர் சிவதாபுரம், பனங்காடு, திருமலைகிரி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும், 385 நபர்களுக்கு போலியான ஆவணங்கள் வழங்கி நிதியுதவி பெற்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் இன்று அவரை கைது செய்தனர். விசாரணையில் போலி ஆவணம் தயாரித்து நிதி உதவி பெற்றுத் தருவதற்காக அந்த கிராம மக்களிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் அவர் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.

பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் சேலம் மாவட்டத்தில் இதுவரை வட்டார வேளாண் உதவி அலுவலர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.