ETV Bharat / state

சேலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! - ஒப்பந்தங்கள்

சேலம்: நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலகின் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்தானது.

students
author img

By

Published : Jun 20, 2019, 2:16 PM IST

சேலம் அருகே உள்ள நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில், ரோபோட்டிக் புராசஸ் ஆட்டோமேஷன் துறையில், யூ.ஐ.பாத்., யு.எஸ்.ஏ. ஏர்கன்டிஷனிங் துறையில், ஐ.ஏ.பி.எம்.ஓ., இந்தியா இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் துறையில் இன்னோவேட்டிவ் சொல்யூசன் பெங்களூரு ஆகிய நிறுவனங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன.

மேலும், ஜப்பான் நாட்டில் இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிகரித்துவரும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு சேலம் மாணவர்களுக்கும் ஜப்பானில் வேலை வழங்க அந்நாட்டு முன்னணி நிறுவனங்கள் நாலேட்ஜ் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதற்கென தமிழ்நாடு மாணவர்களுக்கு ஜப்பான் மொழி பயிற்றுவிக்க ஏபிகே நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாலேஜ் பொறியியல் கல்லூரி

இயந்திரவியல் பொறியியல், கட்டடவியல் பொறியியல் பயிலும் மாணவர்கள் வருடத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் ஜப்பானில் வேலை வாய்ப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பெறவிருக்கிறார்கள். இதில் சுமார் 150 மாணவர்கள் இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.எஸ். சீனிவாசன், கியாட் அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சுரேஷ்குமார் பேராசிரியர்கள் சிவபிரசாத், செங்கோட்டுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:சேலம் நாலேஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலகின் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்தானது.

Body:சேலம் அருகே உள்ள நாலேட்ஜ் பொறியியல் கல்லூரியில், ரோபோட்டிக் புராசஸ் ஆட்டோமேஷன் துறையில், யூ.ஐ.பாத்.யு.எஸ்.ஏ. ஏர்கன்டிசனிங் துறை, ஐ.ஏ.பி.எம்.ஓ. இந்தியா இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் துறை, இன்னோவேட்டிவ் சொல்யூசன் பெங்களூரு ஆகிய நிறுவனங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன.

மேலும் ஜப்பான் நாட்டில் இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிகரித்து வரும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு சேலம் மாணவர்களுக்கும் ஜப்பானில் வேலை வழங்க அந்நாட்டு முன்னணி நிறுவனங்கள் நாலேட்ஜ் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து உள்ளனர். இதற்கென தமிழக மாணவர்களுக்கு ஜப்பான் மொழி பயிற்றுவிக்க ஏபிகே நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் சிவில் என்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் வருடத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் ஜப்பானில் வேலை வாய்ப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பெற விருக்கிறார்கள்.

150 மாணவர்கள் இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Conclusion:இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் நாலேஜ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் பி எஸ் எஸ் சீனிவாசன் , கியாட் அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சுரேஷ்குமார் பேராசிரியர்கள் சிவபிரசாத், செங்கோட்டுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.