ETV Bharat / state

கொள்ளேகாலில் கொலை செய்தவர் கொளத்தூரில் கைது! - karnataka police and kollathur police

சேலம்: கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் கொலை செய்துவிட்டு சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி கொளத்தூரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளி முருகேசன்
author img

By

Published : Sep 4, 2019, 10:52 AM IST

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள மிளகாய் பொதையைச் சேர்ந்த முருகேசன் (55) என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்துவந்தார். இவர் 2015ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் அடுத்த ஹாலே கிராமத்திலிருந்தபோது கரும்பு வெட்டும் வேலை செய்த ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜம்மாள் (37), காசி மனைவி சிவம்மா (35) ஆகியோரிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் இரண்டு பேர் உள்பட ஐந்து பேரையும் கடந்த மே 12ஆம் தேதி முருகேசன் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கொள்ளேகால் காவல் துறையினர் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மேலும் மூவரைக் கொலை செய்தது தெரியவந்தது.

இவ்வழக்கு தொடர்பாக கர்நாடக நீதிமன்றம் முருகேசனுக்கு தூக்கு தண்டனை விதித்ததால் அவர் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவந்தார்.

கொள்ளேகாலில் கொலை செய்தவர் கொளத்தூரில் கைது

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கர்நாடக சிறையிலிருந்து தப்பிய முருகேசனை அவருடைய சொந்த ஊரில் வைத்து கொளத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கொளத்தூர் வந்த கர்நாடக சிறைச்சாலை ஐஜி ரேவண்ணா விசாரணை மேற்கொண்டு மீண்டும் அவரை பெல்காம் காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

மேலும் கொளத்தூர் காவல் துறையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த ரேவண்ணா அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Intro:

கர்நாடக சிறையில் இருந்து தப்பிய கொலை குற்றவாளி கொளத்தூர் அருகே கைது:

தமிழக போலீசாருக்கு கர்நாடக ஐ.ஜி. ரேவண்ணா நேரில் பாராட்டு !Body:

கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையிலிருந்து 4 மாதங்களுக்கு முன் தப்பி மேட்டூர் அருகே உள்ள ,கண்ணாமூச்சியில் பதுங்கி இருந்த தூக்கு தண்டனை கைதியை கொளத்தூர் போலீசார் பிடித்து கர்நாடக போலீஸில் ஒப்படைத்தனர்.

மேலும் , கைதி முருகேசனை பிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய கொளத்தூர் போலீசாரை
கர்நாடக சிறைத்துறை ஐ.ஜி . ரேவண்ணா நேரில் பாராட்டினார்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் , கண்ணாமூச்சி, அருகே உள்ள மிளகாய் பொதையைச்சேர்ந்த ஆண்டியப்பன் மகன்
முருகேசன் (55).கூலித் தொழிலாளி.

இவரது மனைவி பாப்பா(50) , திருமணமான நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

முருகேசன் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலம் ,கொள்ளேகால் அடுத்த ஹாலே கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்த ,ஈரோடு
மாவட்டம் ,அந்தியூரைக் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜம்மாள் (37),காசி மனைவி சிவம்மா(35) ஆகியோரிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரையும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் 5 பேரையும் கடந்த 12.05.2015 அன்று கொலை செய்துள்ளார்.

அது தொடர்பாக கொள்ளேகால் போலீசார் முருகேசனைக் கைது செய்து விசாரணை நடந்தது. அதில் இவர் மேலும் மூவரைக் கொலை செய்தது தெரிய வந்தது.

இவ் வழக்குகள் தொடர்பாக கர்நாடக
நீதி மன்றம் முருகேசனுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து முருகேசன் கர்நாடக
மாநிலம் பெல்காம்,இண்டல்கா
சிறைச்சாலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 22.04.2019 அன்று கர்நாடக சிறையிலிருந்து முருகேசன் தப்பினார்.

இந்நிலையில் முருகேசன், சொந்த ஊரான கண்ணாமூச்சியில்
ஒளிந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,
கொளத்தூர் போலீசார் முருகேசனை பிடித்து
காவலில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சிறைச்சாலைகளின் .ஐ. ஜி.
ரேவண்ணா கொளத்தூர் வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து இன்று மாலை , கர்நாடக போலீஸார் கொளத்தூர் காவல் நிலையத்தில் கொலையாளி முருகேசனை கைது செய்தனர்.

பின்னர் குற்றவாளியை பெல்காம் ரூரல் காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் சங்கமேஷ் .வீ.சிவயோகி ஆகியோர், பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

மேலும் சிறையிலிருந்து தப்பிய கொலையாளியை பிடித்த கொளத்தூர் காவல் நிலைய போலீசாரை
கர்நாடக சிறைத்துறை ஐ.ஜி . ரேவண்ணா பாராட்டினார்.

Conclusion:
இவர்களுக்கு சன்மானம் வழங்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.