சேலம்: கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (39). இவரது மனைவி யசோதா (31). இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் புதிய தொழில் தொடங்குவதற்கு மனைவியின் குடும்பத்தாரிடம் ரூ.5 லட்சம் வரை வரதட்சணையாக பெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே யசோதாவுடன் வாழ பிடிக்கவில்லை என சந்தோஷ்குமார் அடித்து விரட்டி உள்ளார். தொடர்ந்து அவர் தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மனைவியை கொல்ல முயற்சி
இதனையடுத்து கணவரிடம் தான் வரதட்சணையாக கொடுத்த ரூ. 5 லட்சம் பணத்தை யசோதா திரும்ப கேட்டுள்ளார். இதனால் மனைவியின் வாயில் சாணி பவுடரை கரைத்து ஊற்றி சந்தோஷ்குமார் கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது மயங்கி விழுந்த யசோதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி காவல் துறையினர் சந்தோஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளர் படுகொலை: கரூர் அருகே பரபரப்பு