ETV Bharat / state

சேலத்தில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்!

author img

By

Published : May 12, 2020, 11:46 AM IST

சேலம்: சர்வதேச உலக செவிலியர் தினத்தையொட்டி செவிலியர் தகுந்த இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

international nurses day celebrated in Salem

தங்களது குடும்பத்தையும், குழந்தைகளையும் மறந்து தியாக மனப்பான்மையுடன் நோயாளிகளை தங்களின் பிள்ளைகளாகவே கருதி சேவை செய்துவரும் செவிலியரை பாராட்டும் நோக்கில் உலகம் முழுவதும் மே 12ஆம் தேதி உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மக்களின் ஆரோக்கியத்தில் செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை குறிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

அதில் செவிலியர் மெழுகுவர்த்தி ஏந்தி, பணியின் மகத்துவம் குறித்தும் நோயாளிகளிடம் எந்த ஒரு விருப்பு, வெறுப்பையும் காட்டாமல் தியாக உணர்வுடன் பணியாற்றிட செவிலியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இனிப்புகளை பகிர்ந்துக் கொண்ட செவிலியர்
இனிப்புகளை பகிர்ந்துக் கொண்ட செவிலியர்

இதனைத் தொடர்ந்து செவிலியர் அனைவரும் தகுந்த இடைவெளி கடைப்பிடித்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதையும் படிங்க...’வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்’- ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.