ETV Bharat / state

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு! - TN Election 2021 candidates

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சேலத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்
சேலத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்
author img

By

Published : May 2, 2021, 10:14 AM IST

Updated : May 2, 2021, 11:58 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் தபால் வாக்கெடுப்பிற்கு பிறகே இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், கூடலூர் (தனி) மற்றும் குன்னூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை மையமாக உதகையிலுள்ள அரசு பாலிடெக்னிக் மையம் செயல்படுகிறது.

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி), காங்கயம் தொகுதி, அவிநாசி(தனி) தொகுதி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதி, உடுமலைப்பேட்டை தொகுதி, மடத்துக்குளம் தொகுதி ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள்: தெற்கு மண்டலத்தின் கடந்த கால வரலாறு

Last Updated : May 2, 2021, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.