கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தும், அம்மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்தும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில், இன்று(அக்.12) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.110 அடியாகவும், நீர் இருப்பு 63.69 டி.எம்.சியாகவும் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரத்து 102 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்ட பாசனத் தேவைக்காக விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 14 நிறுவனங்கள்: இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்