சேலம் மாவட்டத்தில், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் பள்ளப்பட்டி பகுதியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி சேலம் மதுவிலக்கு காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்களிடமிருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அதற்கான விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதி சந்தோஷ், மற்றும் மதுவிலக்கு ஆய்வாளர் சித்ரா ஆகியோர் முன்னிலையில் 2172 மது பாட்டில்களும் அழிக்கப்பட்டன.
இதையும் படிங்க: நூதன முறையில் தங்கத் துகள்களைக் கடத்தியவர்களுக்கு வலைவீச்சு!