ETV Bharat / state

'திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?' அரசு ஊழியர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!

author img

By

Published : Dec 17, 2022, 10:25 PM IST

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் குறித்து பேசி வரும் நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்காக செயல்பட்டு வருகிறார். இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் சங்கம் இன்று மாலை கடுமையான ஒரு போராட்டத்தை அறிவிக்க உள்ளது என்று சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

பழனிவேல் தியாகராஜனின் கார்ப்பரேட் மாடலுக்கு எதிராக போராடுவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ குமார் பேரவையைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களுக்குக் கூட்டாகப் பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மற்றும் மாநில பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசை அசைக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தையே நடத்த முடியாத அளவுக்கு கடும் போராட்டம் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

2024 பாராளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் 6 சதவீத வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று கூறிய அவர்கள், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி இனிமேல் நம்ப போவதில்லை என்றும், தீவுத்திடல் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும், எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள், எங்களுடைய கோரிக்கைகளுக்கு
நிதி பற்றாக்குறை என்று காரணம் கூறுவது ஏற்க முடியாது என்றனர். மேலும் அவர்கள் ஸ்டாலின் திராவிட மாடல் பற்றிப் பேசுகிறார், நிதி அமைச்சரோ கார்ப்பரேட் மாடலுக்காக செயல்படுகிறார். எங்களது போராட்டம் கார்ப்பரேட் மாடலுக்கு எதிரானதாக அமையும் என்றனர்.

தொடர்ந்து பேசும்போது, சமூக நீதிப் பேசும் திமுக அரசு சமூக நீதியைச் சீர்குலைக்கக் கூடிய அரசாணைகள் 115, 139 மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. இந்த அரசாணைகள் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை இனி வரும் காலங்களில் தேர்வாணையம் மூலம், வேலைவாய்பகம் மூலமாக பணி நியமனம் செய்வதற்குப் பதிலாக, அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஆட்கள் நியமனம் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்க முடியாமல் 69 சதவீத சமூக நீதி இடஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்ன திமுக அரசு இரட்டை தன்மை கொண்ட அரசாக உள்ளது என்று கூறிய அவர்கள், தமிழக அரசின் கஜானாவில் உள்ள வைப்புநிதி தொகை 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை சுரண்டுவதற்காகச் செயல்படும் பழனிவேல் தியாகராஜனின் கார்ப்பரேட் மாடலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றனர்.

இதையும் படிங்க: உதயநிதி அமைச்சரானது வரவேற்கத்தக்கது - துரை வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.