ETV Bharat / state

4 கிலோ போலி நகையை வைத்து ரூ. 94 லட்சம் மோசடி - வங்கி ஊழியர் தலைமறைவு

சேலம்: தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிக் கிளையில் நான்கு கிலோ அளவிலான போலி நகைகளை வைத்து ரூ. 94 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

gold loan cheating in Salem co operative bank

author img

By

Published : Feb 21, 2020, 9:21 AM IST

சேலம் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேலத்தையடுத்த கோட்டக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் நகை மதிப்பீட்டு ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கூட்டுறவு வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடமானம் வைத்த நகைகளை, அதிகாரிகள் சரிபார்த்த போது, அதில் 4 கிலோ அளவுக்கு போலி நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்தப் போலி நகைகள் எந்த தேதியில் அடமானம் வைக்கப்பட்டது என ஆய்வு செய்தபோது, நகை மதிப்பீட்டாளர் மூலமாக 27 நபர்களின் பெயர்களில் நான்கு கிலோ போலி நகைகள் வைக்கப்பட்டதும், இதற்காக 94 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் தெய்வமணி, மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்ததையடுத்து, நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது வீட்டிற்குச் சென்று உள்ளனர். ஆனால் கவால் துறையினர் வருவதை அறிந்த சக்திவேல், தலைமறைவாகிவிட்டார்.

நான்கு கிலோ போலி நகையை வைத்து ரூ. 94 லட்சம் மோசடி

இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சக்திவேல் தற்போது தருமபுரி மாவட்டத்தில் தலைமறைவாக உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர், அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பரபரப்பாக இயங்கும் சேலம் தொழில் கூட்டுறவு வங்கிக் கிளையில், நகை மதிப்பீட்டாளர் மூலம் நான்கு கிலோ போலி நகைகள் வைக்கப்பட்டு ரூ. 94 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது சேலத்தில் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜூஸ் கொடுத்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.