சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு மருத்துவமனை முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து தொற்று காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து இன்று (மே 28) மீண்டும் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, நேரடியாக அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அரசு மருத்துவமனையில் எந்த அளவிற்கு ஆக்ஸிஜன் உள்ளது, மருத்துவமனைகளில் போதிய அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், அதிகளவிலான இழப்புகள் எடப்பாடி பகுதியில் ஏற்பட்டு வருவதால், இதனைத் தடுக்க உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவரிடம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதையும் படிங்க: 'கரோனா நோயாளி இறப்பிற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை' எடப்பாடி வலியுறுத்தல்!