ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை! - மருத்துவமனை சிற்றுண்டி கடைகளில் தரமற்ற உணவகள் பறிமுதல்

சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் தேநீர், சிற்றுண்டி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற உணவு வகைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Food Saftey Department
author img

By

Published : Oct 21, 2019, 6:55 PM IST

சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இவர்களுக்காக மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேநீர், சிற்றுண்டி கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளில் நோயாளிகள், பொதுமக்களுக்கு தரமில்லாத உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டபோது

அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களின் காலாவதி காலம், டீத்தூள், பலகாரத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், உணவு வகைகளின் தரம் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது தரமில்லாத உணவுப்பொருள்கள், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு காதுக்கு பதிலாகத் தொண்டையில் ஆப்பரேஷன்: மருத்துவர்கள் அலட்சியம்!

Intro:சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனை வளாகத்தில் இயங்கி வரும் தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற உணவு வகைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.Body:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தரமில்லாத உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு கிடைத்த புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் காலாவதி காலம் மற்றும் டீத்தூள், பலகாரத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் உணவு வகைகளின் தரம் உள்ளிட்டவற்றை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது சிக்கிய தரமில்லாத உணவுப்பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி - கதிரவன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்..

visual send mojo
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.