ETV Bharat / state

சேலத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு உணவுத் திருவிழா!

author img

By

Published : Dec 26, 2019, 4:18 PM IST

சேலம்: பல்வேறு உணவகங்களைச் சேர்ந்த உணவு வகைகளை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் காட்சிப்படுத்தி வழங்கும் நோக்கில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்று நாள்களுக்கு உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Salem food festival
Salem food festival

இந்த உணவுத் திருவிழா குறித்து சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் உணவுத் திருவிழா நிகழ்வுகளைப்போன்று, இந்த உணவுத் திருவிழாவிலும் சேலம் மாவட்டத்தின் சுவைமிகு உணவு வகைகளைக் காட்சிப்படுத்தவுள்ளோம். உணவுப் பொருள்களை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் எங்களது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மூன்று நாள்கள் உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Salem food festival

இந்த விழா நாளை தொடங்கி, வரும் 29ஆம் தேதிவரை சேலம், மூன்று ரோடு அருகிலுள்ள ஜவஹர் மில் திடலில் நடைபெறவிருக்கிறது . இந்த உணவுத் திருவிழாவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உணவகங்கள் பொதுமக்கள் முன்னிலையிலேயே பல்வேறு சைவ, அசைவ உணவு வகைகளையும் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கவுள்ளது" என்று தெரிவித்தார்.

மாலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில், கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆழிப்பேரலைத் தாக்கி, 15 ஆண்டுகள் கடந்தும் மேம்படாத மீனவர்களின் வாழ்நிலை!

Intro:சேலம் உணவு திருவிழா நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Body:சேலம் மாவட்டத்தின் உணவு வகைகளை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காட்சிப்படுத்தி வழங்கும் நோக்கில் சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் உணவுத்திருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவு திருவிழா குறித்து சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," தமிழகத்தில் சுவை மிகுந்த உணவு வகைகளை பல்வேறு இடங்களில் உணவு திருவிழா நிகழ்வுகளாக நடத்தி வருகின்றனர்.

அதேபோல சேலம் மாவட்டத்தின் சுவைமிகு உணவு வகைகளை உணவு திருவிழாவாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் எங்களது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் திருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் இந்த விழா வரும் 29ஆம் தேதி வரை சேலம் மூன்று ரோடு அருகில் உள்ள ஜவஹர் மில் திடலில் நடைபெற இருக்கிறது . இந்த உணவு திருவிழாவில் சேலத்தின் ஹோட்டல்கள் மூலம் பொதுமக்கள் முன்னிலையிலேயே தயாரித்து அசைவ சைவ உணவு வகைகள் வகைவகையாக பொதுமக்களுக்கு பரிமாறப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

Conclusion:மேலும் அவர் கூறுகையில்," மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இந்த ஒரு உணவுத் திருவிழா நடைபெறும். திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு நாவிற்கு சுவையான உணவுகள் வழங்குவதோடு கண்ணுக்கு குளிர்ச்சியான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.