மேட்டூர் பேருந்து நிலையம், சத்யா நகர், கோட்டையூர் பிரிவு ரோடு உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியேற்று விழா இன்று (அக.22) நடைபெற்றது. இவ்விழாவில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் முத்துலட்சுமி வீரப்பன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்கள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சேலம் மேற்கு மாவட்டச் செயலர் மோகன்ராஜ், அமைப்பாளர் வெங்கடாஜலம், மேட்டூர் மகளிர் அணித் தலைவி துளசிமணி, கொளத்தூர் ஒன்றிய செயலர் சக்திவேல், மேட்டூர் நகர செயலர் செல்வராஜ், சத்தியாநகர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கட்சி கொடியேற்றுவதில் போட்டி: அதிமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை