தீவட்டிப்பட்டியில் உள்ள பேக்கரியில், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், வீரமணி, மணிகண்டன், சின்னதுரை, முருகன் என்ற ஐந்து பேர் உணவுப்பொருட்களை நேற்று வாங்கியுள்ளனர். பின்னர் வாங்கிய உணவுப் பொருட்களுக்கு உரியப் பணத்தை பேக்கரியில் கொடுக்காமல் அந்த இடத்தை விட்டுச்செல்ல முயற்சித்துள்ளனர்.
அப்போது, பேக்கரியில் அமர்ந்திருந்த கேஷியர் பந்தல்ராஜ், வாங்கிய பொருட்களுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு செல்லும்படி ஐந்து பேரிடமும் கூறியிருக்கிறார். ஆனால், பணத்தைக் கொடுக்காமல் ஐந்து பேரும் கேஷியருடன் தகராறில் ஈடுபட்டு கடையில் இருந்த குளிர்பானங்களை எடுத்து உடைத்துள்ளனர்.
மேலும், கேஷியருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அந்த ஐந்து பேரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி காவலர்கள், அந்த ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். பிடிபட்ட ஐந்து பேர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலையை ஹேக் செய்தது யார்? - வைகோ கேள்வி