ETV Bharat / state

தடைக்காலம்... மீன்களின் விலை உயர்வு! - வஞ்சிரம் மீன்

சேலம்: மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீன்வர்கள் யாரும் கடலுக்கு;d செல்லததால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மீன்க
author img

By

Published : May 9, 2019, 3:24 PM IST

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் சுமார் 60 நாட்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தமிழ்நாடு மீனவர்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலமானது ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கியது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், சேலம் வ.உ.சி. மார்க்கெட்டுக்கு ரயில்கள் மூலம் தூத்துக்குடி, நாகப்பட்டினம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் ஐந்து டன் வரை மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் 500 முதல் 1000 கிலோ வரை மட்டுமே மீன்கள் கொண்டுவரப்படுகிறது. இதனால் அனைத்து மீன்களின் விலையும் கிலோவிற்கு ரூபாய் 100 முதல் 250 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

சேலம் வ.உ.சி. மார்க்கெட்
மீன்கள் பழைய விலை (ரூபாயில்) புதிய விலை (ரூபாயில்)
வஞ்சிரம் 500 800
நண்டு 250 450
மத்தி 120 200
முட்டை பாறை 220 380
இறால் 400 550

மீன்களின் விலை உயர்ந்துள்ளதால், மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.