சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் செட்டிச்சாவடியில், மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைக் கழிவுகள் இங்குதான் கொட்டப்படுகிறது.
இந்த குப்பைக் கிடங்கில் நேற்றிரவு திடீரென்று தீப்பற்றியது. தொடர்ந்து, குப்பைக் கிடங்கில் இருக்கும் கழிவுகளில் தீ பரவியது. இதனால் அருகிலுள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கின் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குப்பைக் கிடங்கில் பரவும் தீயால் புகை குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்து ஆளாகியுள்ளனர்.
எனவே, குப்பைக் கிடங்கில் பரவி வரும் தீயை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுக்கரை சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுத்துகள்கள்; மூச்சுத் திணறலால் மக்கள் அவதி