சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள முட்டைக்கடைப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை இப்பகுதியில் உள்ள குடிசைகளில் திடீரென தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயானது அனைத்துக் குடிசைகளுக்கும் பரவியதால், 30-க்கும் மேற்பட்ட குடிசைகள் பற்றி எரிந்தன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், குடிசையில் இருந்த துணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தீயில் கருகியது. இந்த தீ விபத்தில் லேசான காயத்துடன் மூன்று பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து காரிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் மேல் குடிசையில் தீ விபத்து: ஒரு லட்சம் ரூபாய் பொருள்கள் நாசம்