சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு கிராமத்தில் உள்ள தூய செல்வநாயகி அன்னை ஆலயத்தின் 365 மற்றும் தூய செல்வநாயகி அன்னை பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திருவிழா திருப்பலி தூய செல்வநாயகி அன்னைக்கு நன்றி புகழ்மாலை சேலம் மூவேந்தர் பணி நிலைய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இயேசு பிறப்பிலிருந்து உயிர்ப்பு வரை. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உயிரோவியமாக நடித்து நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக உயிர்த்த ஆண்டவர் இயேசு சிலை மற்றும் பெரியநாயகி மாதா சிலை தேர்பவனியில் வைத்து ஊரை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.