ETV Bharat / state

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி திமுக எம்எல்ஏவிடம் விவசாயிகள் மனு - 8 வழி சாலை

சேலம்: எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட சட்டப்பேரவையில் வலியுறுத்துமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று சேலம் திமுக எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

திமுக எம்எல்ஏ
author img

By

Published : Jul 1, 2019, 8:11 AM IST

சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்து அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சேலம் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறுகையில், "சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டும்தான் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் வலியுறுத்தவேண்டி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளோம்.

திமுக எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்த விவசாயிகள்

எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு தண்ணீர் பஞ்சம் தான் அதிகரிக்கும். எனவே, விவசாய நிலங்கள் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல், ஏற்கனவே உள்ள பாதை வழியாக எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்படும் ஐந்து மாவட்ட விவசாயிகளும் ஒன்றிணைந்து திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

Intro:8 வழி சாலைக்கு சட்டசபையில் குரல் கொடுக்க திமுக எம்.எல்.ஏ .ராஜேந்திரனிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Body:சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட சட்டசபையில் வலியுறுத்துமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று சேலம் திமுக எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

சேலத்திலிருந்து சென்னைக்கு 8 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடந்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் இத் திட்டத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இத் திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அதில் நடைபெற்ற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் 8 வழி சாலை கைவிட வலியுறுத்தும் 6 கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சேலம் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறுகையில்.

சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் கைவிடப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டும்தான் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வலியுறுத்த வேண்டி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளோம்.

8 வழி சாலை விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதி மன்றம் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அதேபோல் தீர்ப்பை எதிர்த்து செய்துள்ள மேல் முறையீட்டை வாபஸ் பெற வேண்டும்.

பருவ மழை பெய்ந்து விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளதால் சேலத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தற்போது தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மரங்களை வெட்டி அதுதான் இதற்கு முக்கிய காரணம். தற்போது 8 வழி சாலை அமைக்கப்பட்டால் மேலும் ஏராளமான மரங்கள் வெட்டப்படும். எனவே விவசாய நிலங்கள் வழியாக இத்திட்டத்தை செயல் படுத்தாமல், ஏற்கனவே உள்ள பாதை வழியாக 8 வழி சாலை அமைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்படும் 5 மாவட்ட விவசாயிகளும் ஒன்றிணைந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.