முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சேலத்தில் தனியார் பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 1947ஆம் ஆண்டு எப்படி முக்கியமான ஆண்டாக இருந்ததோ, அதுபோன்று 2020ஆம் ஆண்டை கலாம் கனவு ஆண்டாக நினைத்தார். கலாம் கனவு கண்டது போன்றே பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தையும், உயர்கல்வியை அனைவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் ஓரளவிற்கு நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர், இந்தியாவில் தமிழ்நாடுதான் உயர்கல்வியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு அரசு கல்வியில் உள்கட்டமைப்பினை சிறப்பாக செய்து வருவகிறது. பள்ளி கல்வியில் மாணவர்கள் நீட் தேர்வினை எதிர்கொள்ள மதிப்பீடு வழங்க வேண்டியுள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதை, பொதுத்தேர்வாக கருதாமல் பொது மதுப்பீடாக கருதவேண்டும். இந்த தேர்வினால் மாணவர்களுக்கு எந்த தடையும் இருக்காது என கூறினார்.
5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைக்கப்படும் பொதுத்தேர்வானது நடைமுறையில் உள்ள தேர்வு மாதிரிதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் கணிதம், அறிவியலில் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர மதிப்பீடு அவசியமாக இருக்கிறது. அந்த வகையில் இத்தேர்வுகள் மாணவர்களுக்கு நல்ல மதிப்பீடாக அமையும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பட்ஜெட் 2020இல் பல்வேறு சோதனை முயற்சிகள்' - வைகைச்செல்வன்