சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தின் சார்பில் காமாண்டபட்டியில் உள்ள ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் 'காவலர்களின் வீர மரணமும், அவர்களது அர்ப்பணிப்பும்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்தத் தலைப்பில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு காவல்துறையினரின் பணிகள் குறித்து கட்டுரையையும், கவிதைகளையும் பாடி காட்டினர். இந்தப் போட்டிக்கு பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த கவிதை, கட்டுரை மற்றும் நாடகங்களைத் தேர்வு செய்தனர்.
அதன்படி, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: