ETV Bharat / state

"முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் - Salem News

Edappadi Palaniswami: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 விளம்பரத்திற்காக நடத்தப்பட்டதாக மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi Palaniswami
எடப்பாடி பழனிசாமி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 3:17 PM IST

Updated : Jan 11, 2024, 4:26 PM IST

சேலம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட இந்த அரசு நிறைவேற்ற வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். தமிழக அரசு தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் தொழிலாளர்கள் கோரிக்கையைக் கேட்கின்றனர். ஆனால், தமிழக அரசு நீதிமன்ற உத்தரவு மீறி உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில், 22,000 அரசுப் பேருந்துகள் இருந்தது. ஆனால், தற்பொழுது 17,000 பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. ஐந்தாயிரம் பேருந்துகள் முழுமையாகப் பழுதாகிக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மானிய கோரிக்கையின் பொழுது 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று கூறுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக. தொடர்ந்து, மூன்று ஆண்டுக் காலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு பேருந்துகள் கூட வாங்கவில்லை.

தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் உடைந்த பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளின் நிலைமை, சிவகங்கையில் ஒரு ஓட்டுநர் பேருந்தை இயக்க முடியவில்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்று பேருந்தை நிறுத்தி உள்ளனர்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையைத் துவங்கி உள்ளது. கட்டுமானங்கள் துவங்கி உள்ளன என்பது குறித்து தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்டேன். ஆனால், இதுவரை பதில் அளிக்கவில்லை.

முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2015ஆம் ஆண்டு முதலீட்டாளர்கள் வரவேண்டும் என்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். அந்த மாநாடு காரணமாக அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

தற்போது, நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு விளம்பரத்திற்காக நடத்தப்பட்டதாக மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் எந்தெந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வந்துள்ளது என்று பொதுமக்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரூர் அருகே இளைஞர்கள் உடன் வாக்குவாதம்.. அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Last Updated : Jan 11, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.