காலிப்பணியிடங்கள்:
ஆய்வுகூட இரசாயனர் (lab chemist) - 4
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் வேதியியலை முதன்மைப் பாடமாகவும் கணிதம், இயற்பியல் கொண்ட பட்டம் படித்தவர்கள், சர்க்கரை ஆலையில் 1 வருட அப்ரண்டிஸ் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது வேதியியலை முதன்மைப் பாடமாகவும் கணிதம், இயற்பியல் கொண்ட முதுகலைப் பட்டம் படித்தவர்கள், சர்க்கரை ஆலையில் 1 வருடம் அப்ரண்டிஸ் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மனித வளத்துறை அரசாணை 13.09.2021 ன் படி, அனைத்து பிரிவினருக்கும் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பள விவரம்:
ஆய்வுகூட இரசாயனர் – ரூ.7400-120-8600-125-9850-130-13100
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வி மற்றும் முன் அனுபவத்திற்கான சான்றிதழ் நகல்களை இணைத்து, மேலாண்மை இயக்குநர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் என்ற முகவரிக்கு 03.11.2022 ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!