சேலம் அஸ்தம்பட்டி முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே மேம்பாலம் அருகே சுந்தர லாட்ஜ் பகுதியில் மேட்டூர் - சேலம் குடிநீர் குழாய் செல்கிறது. இதனால், குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பள்ளம் பறிக்கப்பட்டதால் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெள்ளமாக சாலையில் ஓடியது.
இதனை அறிந்த சேலம் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தினர். இதையடுத்து, மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தனர்.