சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து அதிமுக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் வாழ்த்து பெற்றோம். எங்களிடையே குழப்பங்கள் எதுவும் இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் 2021- அதிமுக படுதோல்வி: தலைமைச் செயலக அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்!