ETV Bharat / state

"எனது தம்பி கனகராஜின் மரணம் விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை" - முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மீது பகீர் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 5:21 PM IST

Kodanadu case: கோடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவர்தான் என்னுடைய தம்பியை இயக்கினார். ஆனால், வழக்கில் ஏதும் சம்பந்தம் இல்லாதது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த தனபால்

சேலம்: கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தனபால் இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'நில மோசடி வழக்கில் தவறாக எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேச்சேரி காவல் துறையினர் வேண்டுமென்றே என் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து என்னை அழைத்துச் சென்ற காவல் துறையினர், காவல் நிலையத்தில் வைத்து கண்களை கட்டி கைகளை கட்டி கீழே தள்ளிவிட்டு கடுமையாக இரும்பு கம்பியால் தாக்கினர்.

10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் என்னை மிரட்டி கேட்டார். ஆனால் நான் மறுப்பு தெரிவித்ததால் கடுமையாக தாக்கப்பட்டேன். எனது பல்லைப் பிடுங்கி துன்புறுத்தினர். பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். சிறையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு கோவையிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது.

காவல் துறையினர் தாக்கியதால் எனது இதயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் எதுவும் கூறக்கூடாது என்று மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் மிரட்டினார்” என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “என்னை வழக்கில் இருந்து விடுவிக்க பத்து லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்ட ஆய்வாளர், எனக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனையடுத்து என்னுடைய மற்றொரு தம்பி பழனிவேல், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகுதான் ஜாமீன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனவே என்னை பொய் வழக்கில் சிக்க வைத்து அடித்து துன்புறுத்தி, பல்லை பிடுங்கிய காவல் ஆய்வாளர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்துள்ளார். அவர் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து என்னையும் என் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த தனபால், “கோடநாடு கொலை வழக்கு குறித்து முக்கிய விஷயங்களை என்னுடைய தம்பி கனகராஜ் என்னிடம் பகிர்ந்து உள்ளார். உரிய நேரம் வரும்போது அதனை வெளியிடுவேன். இதுவரை காவல் துறையினர் இது குறித்து என்னிடம் விசாரிக்கவில்லை. விசாரித்தால் அனைத்து உண்மைகளையும் வெளியில் கொண்டு வருவேன். கோடநாடு வழக்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பல உண்மைகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர் நேரம் ஒதுக்கி என்னை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவர்தான் என்னுடைய தம்பியை இயக்கினார். ஆனால், வழக்கில் ஏதும் சம்பந்தம் இல்லாதது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். முதலில் அவரை விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் அவர் தொடர்புடையவராக உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி சொல்லியதாகத் தான் கோடநாட்டிலிருந்து ஐந்து பெரிய பைகளில் ஆவணங்களை என்னுடைய தம்பி கனகராஜ் கோடநாடு கொலை குற்றவாளி சயான் உதவியுடன் காரில் எடுத்துச் சென்றார்.

அதில், சங்ககரியில் மூன்று பைகளும் சேலத்தில் இரண்டு பைகளும் கொடுத்துவிட்டதாகவும் தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். மேலும், கனகராஜ் செல்போன் என்னிடம் இருந்தது. அதனை, எடப்பாடியின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டு அதிலிருந்து ஆவணங்களை அழித்து விட்டார்” என்று கூறினார். கோடநாடு கொலை வழக்கு குறித்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கூறிய புதிய தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தமிழகத்திற்கு தான் விண்கல ஏவுதளம் வரவேண்டியது.. அதை திமுகவினர் கெடுத்தனர்" - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.