சேலம் மாவட்டம் கரியபெருமாள் மலைப் பகுதியில் ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
காணும் பொங்கல் தினமான இன்று (ஜன.16) இக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். ஆனால் கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கோயிலுக்கு பக்தர்கள் வர அதன் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வழக்கமாக நடைபெறும் கரிநாள் உற்சவ விழா, இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காணும் பொங்கல்! - திறக்கப்பட்ட வேடந்தாங்கல்!