ETV Bharat / state

சேலம் தெற்கு ரயில்வே பிரிவில் பல்வேறு திட்டம் தொடங்கி வைப்பு!

author img

By

Published : Nov 30, 2020, 9:52 PM IST

சேலம்: சேலம் பிரிவு்கு வருகை தந்த தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர் ஆர்.பஸ்கரன், பல்வேறு முன்னேற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.

southern railway
southern railway

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் ஸ்ரீ ஆர்.பஸ்கரன் இன்று (நவ.30) சேலம் பிரிவுக்கு வருகை தந்தார். பின்பு சேலம் பிரிவின் எஸ் & டி துறை தொடர்பான பல்வேறு புதிய வசதிகளை தொடங்கி வைத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சேலம் பிரிவின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது, சேலம் பிரிவின் எஸ் & டி துறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சேலம் பிரிவின் வலையமைப்பு வசதிகளின் வேகம், ஜோலார் பேட்டை முதல் போடனூர் வரை இடம்பெறும்.அதேபோன்று ஈரோட்டில் இருந்து கரூர் வரை 65 எம்.பி.பி.எஸ் முதல் 300 எம்.பி.பி.எஸ் வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் உள் வலையமைப்பை பலப்படுத்தும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 381 எம்பிபிஎஸ் இடங்கள் இன்று நிரம்பின!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.