சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். மாற்றுத்திறனாளி. இவருக்கு சொந்தமான இடத்திற்கு செல்லும் மாநகராட்சி பொதுப்பாதையை முன்னாள் தாசில்தார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ள தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் 5 ரோடு, அஸ்தம்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாற்றுத்திறனாளிகளிடம் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்காக சாலைக்கு வந்த பள்ளி மாணவி