சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வனச்சரகராக பணிபுரிந்தவர் என்.மோகன். இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2004ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் என்.மோகன் மற்றும் அவரின் மனைவி சித்ராமணி ஆகியோரிடம் கடந்த சில ஆண்டுகளாகவே விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று(நவ. 28) இந்த வழக்கை விசாரித்த சேலம் ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.பி.சுகந்தி, முன்னாள் வனச்சரகர் என்.மோகன், மனைவி சித்ராமணிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் சேலத்தில் மோகனுக்கு சொந்தமாக உள்ள மூன்று வீடுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது சேலம் வனத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோத பணபரிமாற்றம்: திமுக எம்.பி., சொத்துக்கள் முடக்கம்!