சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அங்கு அவர் கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதால், அவரின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அந்தப் பரிசோதனையில் அவருக்குக் கரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அதையடுத்து அவர் சிகிச்சைப் பெற்றுவந்த அறை, அதனைச் சுற்றியுள்ள வார்டுகளைத் தனிமைப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த பிற நோயாளிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட 16 பேருக்கு கரோனா இல்லை - வழியனுப்பிவைத்த நாகை ஆட்சியர்