சேலம்: கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி சார்பில், அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்தத் தொடக்கப்பள்ளி கடந்த 2017 - 2018ஆம் ஆண்டு சுகாதாரமான கழிப்பிட வசதி, மின்னணு கல்வி, படைப்பாற்றல் திறன் போன்றவற்றுக்காக சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 8 உதவி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர் எண்ணிக்கை 620 ஆக உயர்வு
ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
இங்கு கடந்த ஆண்டு 425 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் 230 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை 620ஆக உயர்ந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
இதனைப் போற்றும் விதத்தில் ஊர் பொது மக்கள் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளியில் 600ஆவது ஆளாக இணைந்த மாணவர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு