கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அரசு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பத்துக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மத்திய, மாநில அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!