ETV Bharat / state

26 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - வெளியான சிசிடிவி காட்சி - வெளியான சிசிடிவி வீடியோ

சேலம்: கருத்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்த 26 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

police
police
author img

By

Published : Dec 23, 2020, 8:28 PM IST

Updated : Dec 23, 2020, 10:17 PM IST

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த அண்ணாமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (26). பட்டதாரியான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்று ஆயுதப் படையில் பணியாற்றி வந்தார்.

2019ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார்.

கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு ராஜசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ராஜசேகர் இன்று(டிச.23) காலை வந்தார்.

இந்நிலையில் காலை 6 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த அவர் ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜசேகர் உடல் அவ்வூரிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டு இன்று (டிச.23) மாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இளம் காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - வெளியான சிசிடிவி காட்சி

காவலர் ராஜசேகர் நெஞ்சு வலியால் துடிப்பதும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து இருப்பதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: குப்பை கொட்ட காசு கட்ட வேண்டுமா - ஸ்டாலின் கடும் விமர்சனம்

Last Updated : Dec 23, 2020, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.