சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.முருக பெருமாள் தலைமையேற்றார்.
முன்னதாக சங்க கொடிகளை மாநில தலைவர்கள் ஏற்றிவைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணை தலைவர் எம். முத்துக்குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் வி.செல்வம் முன்மொழிந்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் உரிமைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத் தொகை மற்றும் சரண்டர் விடுப்பு ஊதியம் பெறுதல், துறைவாரியான கோரிக்கைகளை அழைத்துப் பேசி தீர்வு காணுதல், வேலை நியமன தடைச்சட்டம் திரும்பப் பெற்று அரசுத் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் பாதிக்கப்பட்ட 5068 பேரை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12 ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு