கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படஉள்ளது. இதனையடுத்து, கிறிஸ்துவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாக நட்சத்திரங்களையும் குடிலையும் அமைத்து வருகின்றனர்.
சேலத்தில் உள்ள புத்தகக்கடைகள், அழகுசாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை 15 நாட்களுக்கு முன்னரே களைகட்ட தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்தாண்டு ஸ்டார்களில் பல்வேறு விதமான எல்இடி விளக்குகளில் வடிவமைக்கப்பட்ட ஸ்டார்கள், 60 ரூபாய் முதல், 650 ரூபாய் வரை, வடிவங்களுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு, இரண்டு வாரங்களே உள்ளதால் ஸ்டார்களின் விற்பனை படுஜோராக உள்ளது.