திருப்பூரில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் தனது 3 வயது ஆண் குழந்தையை காணவில்லை என திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு (செப்டம்பர் 24) சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆண் குழந்தையோடு நின்று கொண்டிருந்த நபரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அந்த நபர் சுரேஷ் என்பதும், திருப்பூரில் இருந்து அவர் குழந்தையை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து சுரேஷை பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குழந்தையை கடத்தி வந்த தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முருகானந்தம் மேற்பார்வையாளராக இருக்கின்ற கட்டுமான நிறுவனத்தில் சுரேஷ் வெல்டிங்மேனாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மனைவிக்கும் முருகானந்த்த்திற்கும் திருமணத்தை தாண்டிய தொடர்பு இருந்த காரணத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது குழந்தையை தனது சொந்த ஊரான விருதாச்சலத்திற்கு கடத்தி செல்ல முயன்றதாகவும், விருத்தாசலம் செல்ல பேருந்துக்காக சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும் சுரேஷ் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து திருப்பூர் காவல்துறையினரிடம், கடத்தப்பட்ட குழந்தையையும் சுரேஷையும் சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் குழந்தையை கடத்திய இளைஞர்: சேலத்தில் பிடித்த போலீஸ் - குழந்தையை கடத்திய இளைஞர்
சேலம்: திருப்பூரிலிருந்து ஆண் குழந்தையை கடத்தி வந்த இளைஞர் சேலம் காவல் துறையினரிடம் சிக்கினார்.