ETV Bharat / state

40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி - நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்! - Chief Minister visited the Vellari Velli Lake

சேலம்: எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளரிவெள்ளி ஏரி
author img

By

Published : Nov 9, 2019, 7:26 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி 52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்குத் தண்ணீர் வரவில்லை எனும் காரணத்தினாலும், பருவ மழையும் சரியாகப் பெய்யாததாலும், ஏரி முழுமையாக வறண்டு காட்சியளித்துள்ளது.

இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் அமைச்சராக இருந்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 2016ஆம் ஆண்டு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணை கிழக்கு கடற்கரை கால்வாயிலிருந்து, வெளியேறும் உபரி நீரைக் குழாய் மூலம் கொண்டு வந்து, அந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

எனவே, மூன்று ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த வெள்ளரிவெள்ளி ஏரி நீர்மட்டம் நேற்று அதன் முழுக் கொள்ளளவை எட்டி கரையில் தண்ணீர் வழிந்து ஓடியது . இதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள், கண்ணீர் மல்க இறை வழிபாடு நடத்திக் கிடா வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் .

இந்நிலையில், சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொங்கணாபுரம் பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அப்போது இந்த தகவலறிந்து, வெள்ளரிவெள்ளி ஏரியை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரியில் மலர்த் தூவி மகிழ்ந்தார். பின்பு அதிகாரிகளிடம் பேசிய முதலமைச்சர், ’ஏரியில் நீர் ரொம்ப தெளிவாகவும் சுத்தமாக இருக்கிறது. தொடர்ந்து பராமரிப்புப் பணி செய்து ஏரியை விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் செல்லும் வகையில் திட்டத்தை வகுக்க வேண்டும்’ என ஆலோசனை தெரிவித்தார்.

வெள்ளரிவெள்ளி ஏரி

இந்நிகழ்வில், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இதை படிங்க: அயோத்தி தீர்ப்பு: சட்ட ஒழுங்கு நிலை குறித்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா ஆலோசனை!

Intro:
47 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Body:சேலம் மாவட்டம்

எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி, 40 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பியதால் விவசாயிகள் கிடா வெட்டு நடத்தி கொண்டாடினர்.

வெள்ளரி வெள்ளி ஏரிஸ 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட து. அதன் மூலம் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. பருவமழையும் சரியாக பெய்யாததால் ஏரி முழுமையாக வறண்டு கிடந்தது.

இதனால் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணை கிழக்கு கடற்கரை கால்வாயில் இருந்து வெளியேறும் உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து , அந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் திட்டத்தை 2016 ஆம் ஆண்டில், இன்றைய முதலமைச்சர் அப்போது அமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

3 ஆண்டாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த வெள்ளரிவெள்ளி ஏரி நீர்மட்டம் நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டி கரையில் தண்ணீர் வழிந்து ஓடியது .

முன்னதாக 1979இல் ஏரி நிரம்பி இருந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று ஏரி நிரம்பி வழிந்ததால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க இறை வழிபாடு நடத்தி கிடா வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடி னார் .

2000ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர் .

இன்று சேலம் வந்த தமிழக முதலமைச்சர் கொங்கணாபுரம் பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து எ வெள்ளரிவெள்ளி ஏரியை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீர் ரொம்ப தெளிவாகவும் சுத்தமாக இருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார் .

தொடர்ந்து பராமரிப்பு பணி செய்து ஏரியை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்தார்.

Conclusion:
அப்போது எடப்பாடி பகுதியை சேர்ந்த அ இஅ தி மு க தொண்டர்களும் நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.