தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி சட்டப் பேரவை தொகுதியான பெரியசோரகையில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதிமுதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து சென்னை சென்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசினர்.
இதனையடுத்து நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம், இன்று இரவு கோயம்புத்தூர் வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகம் வந்தார். முன்னதாக சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி அருகே மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் ஆகியோர் , முதலமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் வந்த முதலமைச்சருக்கு அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
இன்று(டிச.28) இரவு சேலத்தில் தங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (டிச.29) காலை நாமக்கல் மாவட்டம் சென்று பல்வேறு இடங்களில் பரப்புரை செய்கிறார்.
இதைத்தொடர்ந்து நாளை(டிச.29) இரவு சேலத்தில் தங்கும் அவர், வரும் டிசம்பர் 30ஆம் தேதியன்று காலை திருச்சி சென்று தேர்தல் பரப்புரை செய்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்வார் என முதலமைச்சர் முகாம் அலுவலக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!