ETV Bharat / state

பூ மார்க்கெட்டில் கூடுதல் வாடகை வசூல் எதிரொலி: உயர் நீதிமன்ற ஆணைய வழக்கறிஞர் விசாரணை - சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்

சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட தனியார் ஒப்பந்ததாரர் கூடுதலாக வாடகை வசூலிப்பதாக பூ மார்க்கெட் சார்பில் வியாபாரிகள் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற ஆணைய வழக்கறிஞர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Chennai high court judge
Chennai high court judge
author img

By

Published : Feb 14, 2021, 1:35 PM IST

சேலம் சின்ன கடைவீதியில் இயங்கி வந்த வ.உ.சி. பூ மார்க்கெட் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட புனரமைப்புக்காக, நகர பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த வளாகத்தில் மொத்தம் 174 கடைகள் இயங்கிவருகின்றன. சேலம் மாநகராட்சி சார்பில் 176 கடைகளும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டன. அதனடிப்படையில் மாநகராட்சி சார்பில் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வாடகை வசூலிப்பதில் மாநகராட்சி அலுவலர்கள் ஒத்துழைப்போடு குத்தகைதாரர்கள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணமாக ரூபாய் 100 முதல் 300 வரை வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி, வாடகை தொகையை வியாபாரிகள் கொடுக்கமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பூ மார்க்கெட் தனியார் குத்தகையை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன் மாநகராட்சி நிர்வாகமே வசூல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்தது.

அதனடிப்படையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் கடை ஒன்றுக்கு 60 ரூபாய் வசூல் செய்து வருகிறது. ஆனால் 20 ரூபாய்க்கு 60 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற ஆணைய வழக்கறிஞர் சுரேஷ் பூ மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளிடம் கடைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற ஆணைய வழக்கறிஞர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது," சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் வ.உ.சி. மார்க்கெட் முழுவதும் உள்ள கடைகளை ஆய்வு மேற்கொண்டு கட்டண விவரங்கள் குறித்து கேட்டறிந்தேன். வியாபாரிகள் தரப்பில் பூ கடைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

விவசாயிகள் கொண்டுவரும் மூட்டைகளுக்கும் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தனியார் ஒப்பந்ததாரர் அடியாட்களை வைத்து வியாபாரிகளை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.

வியாபாரிகளின் புகார்கள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை மல்லிகையின் விலை குறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.