சேலம் மாவட்டத்தில் பழைய சூரமங்கலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பெண்களுக்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும், இளம் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, லெதர் பேக் , காலணிகள், பெல்ட், மணி பர்ஸ், தோள் பேக் ஆகியவற்றைத் தயாரித்து சந்தைப் படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில், பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கி இருக்கும் தங்களுக்கு இந்த தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் பயனுள்ளதாகவும், பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு உதவிக்கரமாக அமைந்தது எனத் தெரிவித்தனர்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர துணைச் செயலாளர் காயத்ரி கலந்துகொண்டு, சுயதொழில் பயிற்சி பெறும் பெண்களுக்குத் தொழில் பயிற்சிக்கான உபகரண பெட்டிகளை வழங்கினார். இதில், சேலம் சாரதா அறக்கட்டளை நிறுவனர் லலிதா,சுயதொழில் பயிற்சிபெறும் பெண்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டுமானப் பொருட்களாக மாறும் கழிவுகள்! - அசத்தும் கல்லூரி