சேலம்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழ்நாடு திமுக அரசைக் கண்டித்து, சேலம் நாட்டாண்மை கட்டடம் முன்பு அஇஅதிமுகவினர் நேற்று (டிசம்பர் 17) மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்நிலையில் நேற்று (டிச. 18) எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துதல், பேரிடர் கால விதிமீறல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், நோய்த் தொற்று பரவ காரணமாக இருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி கட்டிட விபத்தை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு- சட்டப்பேரவை தலைவர் அப்பாவு